இலங்கையின் பைத்தியகார சட்டத்தை வாபஸ் பெற கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்!

fishermen-boatராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ20 கோடி வரை அபராதம் விதிக்கும் இலங்கையின் பைத்தியகார சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமான உரிமை உள்ள பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் மீன்பிடித்தால் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்கிறது.

அத்துடன் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை பறிமுதல் செய்த படகுகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

ரூ20 கோடி அபராதம்

இந்த நிலையில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு ரூ20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை கொண்டு வந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் மீனவர்கள்

இது தமிழக மீனவர்களை மிகக் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதமும் அனுப்பியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

வேலை நிறுத்தம்

இதனால் 800-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இந்த வேலை நிறுத்தத்தால் 10,000க்கும் அதிகமான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: