சீனாவின் இராணுவ நடவடிக்கை! எல்லையில் ஆயுதங்களைக் குவிக்கும் இந்திய இராணுவம்

இந்தியாவிற்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் சீன இராணுவம் செயற்பட்டு வருகிறது. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் எல்லைப் பிரச்சினைகளை அடுத்து, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போர் பதற்றம் ஏற்படுவது வழமை.

சீனா, இந்தியப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, வரைபடங்களை வெளியிடுவதும், அதன் பெயர்களை புதிதாக மாற்றுவதும் பெரும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, இந்திய எல்லைக்குள் வீதியமைக்கும் பணிகள் வரை தனது ஆதிக்கத்தை சீனா காட்டியுள்ளது.

அண்மையில் பூட்டான் நாட்டின் டோக்லாம் பகுதியில் சீனாவின் வீதியினை அமைக்கும் பணிகளை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த சீனா, இந்தியாவின் பதுங்கு குழிகளை அழித்தது. தொடர்ந்து அங்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் சிக்கிம் எல்லையில் திபெத் வடக்குப் பகுதியில் ஷின்-ஜியாங் நகருக்கு அருகே சீனா ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் குவித்து வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கையினால் இந்திய இராணுவத்தினரும் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவொருபுறமிருக்க, பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான முறுகல் நிலையானது மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கையில் சீனாவுடனான சச்சரவும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: