மனுதர்மத்தை, இந்துத்துவாவை ஏற்காத முற்போக்கான அறிவியல் மதம் வீரசைவம்: கர்நாடகா அமைச்சர் பசவராஜ்

basavarajபெங்களூரு: பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வை திணிக்கும் மனுதர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்காத முற்போக்கான அறிவியல் பூர்வமான மதம்தான் லிங்காயத்துகளின் வீரசைவம் என கர்நாடகா அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியுள்ளார்.

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள லிங்காயத்துகளை லிங்காயத்துகள்- வீரசைவர்கள் என தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. கர்நாட்காவில் ஆளும் காங்கிரஸ் அரசும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக கர்நாடகா மாநில அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியதாவது:

12-ம் நூற்றாண்டில் பசவேஸ்வராவால் நிறுத்தப்பட்ட தனி மதம்தான் வீரசைவம்- லிங்காயத் என்பது. இது இந்துமதத்தின் ஒரு பகுதியே அல்ல.

மனித விழுமியங்களுக்கு எதிரான மனுஸ்மிருதியை வீரசைவம் எதிர்க்கிறது. இந்துக்களின் கலாசாரத்தை எதிரொலிப்பவர்களாக லிங்காயத்துகள் இருந்தாலும் இந்துமதத்தின் ஒரு அங்கம் அல்ல.

எதியூரப்பா சார்ந்திருக்கும் சங்கபரிவாரங்கள் முன்வைக்கும் இந்துத்துவாவின் அங்கம் அல்ல வீரசைவர்கள். பிறப்பின் அடிப்படையிலான ஒடுக்குமுறை அமைப்புக்கு எதிராக முற்போக்கானதாக அறிவியல்பூர்வமானதாக பிறப்பெடுத்ததுதான் வீரசைவம்.

இவ்வாறு பசவராஜ் கூறினார்.

பாஜகவுக்கு பேதியைக் கொடுத்த சித்தராமையா- “லிங்காயத்”துகளை தனி மதமாக அறிவிக்க ஒப்புதல்!

பெங்களூரு: மதத்தின் பெயரால் வாக்கு வங்கிகளை ஒருமுகப்படுத்தி வந்த பாஜகவுக்கு அதே மதத்தின் பெயரால் பேதிபோக வைத்திருக்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.

கர்நாடகாவில் லிங்காயத்துகளை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனிமதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படும் என சித்தராமையா ஒப்புக் கொண்டிருப்பது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடகாவில் 11.5% முதல் 19% மக்கள் தொகை கொண்ட சமூகம் லிங்காயத்துகள். மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 110-ல் தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத்துகள் இருக்கின்றனர்.

கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக லிங்காயத்துகள் பாஜகவுக்கும் ஒக்கலிகா சமூகத்தினர் தேவகவுடாவின் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸுக்கும் ஆதரவாக வாக்களிப்பர்.

லிங்காயத்துகள்- வீரசைவர்கள்

நாட்டின் பிற மாநிலங்களில் பாஜக, இந்துமதத்தின் பெயரால் சிறுபான்மையினரை

siddaramaiah1தனிமைப்படுத்தி இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தியது. ஆனால் கர்நாடகாவிலோ பாஜகவை அதிரவைக்கும் வகையில் ‘லிங்காயத்துகளை இந்து சமூகத்தில் இருந்து வேறானவர்கள்.. வீரசைவர்கள் என்ற தனி மதப் பிரிவாக அறிவிக்க கோரும் கோரிக்கை வலுத்து வருகிறது.


அரசு ஒப்புதல்?

இதற்கான பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. சித்தராமையா அமைச்சரவையில் உள்ள 5 லிங்காயத்து அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் இதற்காக பிரசாரம் செய்ய உள்ளனர்.

சித்தராமையா ஆதரவு

இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, லிங்காயத்துகளை தனி மதமாக அறிவிக்கும் கோரிக்கையை அரசு ஏற்கும் என அறிவித்தார். இதற்கு கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

yeddyurappa3-600எதியூரப்பா நிராகரிப்பு

அதேநேரத்தில் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான எதியூரப்பா, இந்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் இந்துமதத்தின் ஒரு அங்கமே லிங்காயத்துகள்; வீரசைவர்கள் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என கூறியிருக்கிறார். லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரிக்க கூடாது என கூறியிருக்கிறார். பாஜக எப்போதும் கையிலெடுக்கும் மதம் எனும் அஸ்திரத்தை காங்கிரஸ் இப்போது தனது ஆயுதமாக எடுத்திருக்கிறது!

tamil.oneindia.com

TAGS: