கோரக்பூரில் 5 நாட்களில் 70 குழந்தைகள் பலி… அதிர்ச்சியில் உத்தரப் பிரதேசம்

gorakhpurகோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், இதுவரை 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 11 குழந்தைகள் உயிரிழந்து உத்தரபிரதேச பெற்றோர்களின் நிம்மதியை மீண்டும் கெடுத்துள்ளது. இந்த விவகாரம் உத்தர பிரதேச அரசுக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “மூளை வீக்கம் காரணத்தினால்தான் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழந்தனர்” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரசின் கவனக்குறைவால் அப்பாவி பெற்றோர்களின் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ள விவகாரம் எதிர்க்கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து தவறு செய்தவர்கள் கொல்லப்பட வேண்டும், என்று கூறுகிறார்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்.

ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கிய தனியார் நிறுவனத்துக்கு பிஆர்டி அரசு மருத்துவமனை பாக்கி வைத்துள்ள விவகாரம் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது மிகப்பெரிய வேதனை என்று கொந்தளிக்கிறார்கள் பெற்றோர்கள்.

tamil.oneindia.com

TAGS: