நடிகர் கமல்ஹாசன் தமிழன் தலையில் கோமாளி குல்லா என அரசியல் நிலவரம் குறித்து டுவீட் செய்துள்ளார்.
திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் கூறிவருகிறார், தற்போது மீண்டும் ஒரு டுவீட்டை கமல் பதிவிட்டுள்ளார்.
அதில், காந்திக்குல்லா, காவிக்குல்லா, காஷ்மீர்குல்லா, தற்போது கோமாளிக்குல்லா தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என பதிவிட்டுள்ளார்.
அதிமுக-வின் இரு அணிகளும் இணையவுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கமல்ஹாசனின் டுவிட் வைரலாக பரவி வருகிறது.
-lankasri.com


























ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். ஈ.பி.எஸ் அணி ஓ.பி.எஸ் அணி ஒன்றுபட்டதில் இந்த கோமாளிக்கு திண்டாட்டம் போலும் அதனால் இந்த காட்டம். உலகப் பெருந் திருடன் திமுக வோடு இணைந்து அதிமுக ஆட்சியை எதிர்ப்பதால் இனி வரும் தன் படங்கள் வெற்றி காணாது என்னும் பயத்தின் வெளிப்பாடு இந்த காட்டமாகவும் இருக்கலாம். ரசிகர்கள் பொதுவானவர்கள். படம் சிறப்பானதாக அமைந்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டாமல் அனைவரும் பார்ப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.
ஐயா கமலஹாசனே
கோமாளி குல்லா அல்ல கோல்மால் குல்லா தற்போது தமிழ்நாடு தமிழன் தலையில்.