மீண்டும் டெல்லியில் அறப்போர்; ஹசாரே பிரதமருக்கு எச்சரிக்கைக் கடிதம்

anna asareபுனே,  மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் அமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் இதற்காக பல முறை கடிதம் எழுதியும் பிரதமர் பதில் எழுதாதது மட்டுமல்ல, இதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டில் ஹசாரே துவங்கிய அறப்போரே ஊழல் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்தது. கடந்த மூன்றாண்டுகளில் மோடி லோக்பால் அமைப்பினை நிறுவ எதையும் செய்யவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ”மக்கள் உங்களை நம்பி வாக்களித்தார்கள், இன்று பணம் கொடுக்காமல் ஒரு வேலையும் நடக்கவில்லை” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

“விலைவாசியும் குறைந்தபாடில்லை; விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியான சுவாமிநாதன் அறிக்கையின் அமலாக்கமும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார் ஹசாரே.

கொடுத்த வாக்குறுதிபடி வெளிநாட்டிலுள்ள கறுப்புப்பணத்தையும் திரும்ப கொண்டுவரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லையென்றால் தனது அறப்போர் துவங்கும் என்ற ஹசாரே அடுத்த கடிதத்தில் எங்கு, எப்போது போராட்டம் துவங்கும் என்பதை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

-dailythanthi.com

TAGS: