வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடி 400 பிள்ளைகளை காப்பாறிய இந்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

Bomb-847787இந்தியா மத்திய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து, பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அவர்கள் பாடசாலையில் வெடி குண்டு ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. உடனே விரைந்து சென்ற பொலிசார் அங்கே சோதனையிட்ட சமயம் வெடிகுண்டு இருப்பது தெரியவரவே. அபிஷேக் பட்டேல் என்னும் 40 வயது காண்ஸ்டபிள் ஒருவர் உடனே , வெடிகுண்டை செயலிழக்கவைக்கும் பிரிவுக்கு போன் அடித்தார். அப்போது தான் தெரியும் அந்த மாவட்டத்தில் அப்படி ஒரு பிரிவே இல்லை என்பது. எனவே வேறு மாவட்டத்தில் இருந்து தான் செயலிழக்கச் செய்யும் பிரிவு வரவேண்டும்.

ஆனால் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் இருந்துள்ளார்கள். இதனை அடுத்து தனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று வெடிகுண்டை கையில் எடுத்தபடி அவர் ஓட ஆரம்பித்துள்ளார். சுமார் 800 மீட்டர் அவர் ஓடிச் சென்று ஒரு புதரில் அந்த வெடிகுண்டை போட்டுள்ளார். சில மணி நேரம் கழித்தே வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவு அங்கே வந்து வெடிகுண்டை வெடிக்கவைத்துள்ளார்கள். ஆனால் தனது உயிரையும் பொருட்படுத்தாது இவ்வாறு, வெடிகுண்டை தாங்கி ஓடிச் சென்ற அவரை, பல நூறு மாணவர்கள் சந்தித்து பாராட்டினார்கள். நீங்கள் நிஜமான ஹீரோ என்று புகழ்ந்தார்கள். வெளிநாட்டு மீடியாக்கள் கூட இச்செய்தியை பரபரப்பாக வெளியிட்டுள்ளது.

அந்த மாவட்ட மக்கள் ஒன்றினைந்து, அவரை புகழ்ந்துள்ளார்கள். இதனை அடுத்து அவருக்கு 50,000 ரூபா சன்மானத்தை அறிவித்த பொலிஸ் மா அதிபர். அவருக்கு பதவி உயர்வுகொடுக்கவும் முன் வந்துள்ளார். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்த தருணத்தை நினைத்து , நான் பெருமைப்படுகிறேன் என்று அபிஷேக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

-athirvu.com

TAGS: