தமிழகம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த அனிதா, மருத்துவ கல்வியை தொடர முடியாமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் முழு தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், சென்னை, திருச்சி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவி அனிதாவுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், மாணவி அனிதாவின் தற்கொலை துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்றும், இது தொடரக்கூடாது என்றும், அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவி அனிதாவுக்கு ஆதரவாக ஸ்டாலின், வைகோ, வேல்முருகன், சீமாம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய மற்றும மாநில அரசுக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
-tamilwin.com
இந்த நாள்வரை இந்த நீட் இல்லாமல் தமிழக மருத்துவ சேவையில் என்ன குறை? தமிழக கிராம மக்கள்தான் தமிழுக்கு உயிர் . அவர்கள் வாழ வேண்டும் உயர வேண்டும் .அவர்கள் வாழ்வின் முன்னேற்றத்தை தடுக்கும் நீட் இனி வேண்டாம் .மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு பிறக்கும் .
அரசியல்வாதிகள் இதையெல்லாம் சும்மா…..துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள்! ஊடகங்கள், விவேகம் ஏன் ஓடவில்லை, விஜய் ஏன் முக்காடு போட்டிருக்கிறார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்! அரசியல்வாதி வீட்டுப் பிள்ளை செத்தால் ஒழிய எவனும் கண்டுக்கமாட்டான்!
தமிழ் நாட்டு காரனுக்கு தற்கொலையும் அரசியல் தான் , உயிரின் விலைமதிப்பு தெரியாத ஜென்மங்கள் வாழும் எதிர் மறையான செய்திகளை இந்த பகுதியில் வெளியிடுவதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள் !
தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தவிர வேறு எந்த கல்வியும் கிடையாதா !! இது அரசாங்கத்தின் குற்றம் அல்ல தமிழ் சமுதாயத்தின் குற்றம் ! அடிமை சிந்தனையில் இருந்து இந்த தமிழ் சமுதாயம் இன்னும் விடுதலை அடையவில்லை என்பதை தான் இத்தகைய செயல்கள் காட்டுகின்றன !! இங்கு நமது நாட்டிலும் அதி மேதாவிகள் தங்கள் பிள்ளைகளின் கல்யாண பத்திரிக்கையில் DR என்ற இரண்டு எழுத்து வர வேண்டும் என்று அங்கிகாரம் இல்லாத ரஷியன் யூனிவெர்சிட்டிக்கு அனுப்பி காசை விரயம் ஆக்குவதோடு இல்லாமல் ! பிள்ளைகளையும் வீட்டில் முடங்கி கிடக்க வைத்து விடுகிறார்கள் !! மனித வளம் விரயம் ஆவதையும் இவர்கள் உணர் வதில்லை ! நமது உள்ளுர் பல்கலை கழகங்களில் மருத்துவ படிப்பிற்கு நம் சமுதாயத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் இடம் கிடைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய போது தானை தலைவன் நமே பல்கலை கழகம் அமைத்து நமது சமுதாயத்தில் மருத்துவர்களை உருவாக்குவோம் என்று முழக்கமிட்டார் ! உருவாக்கினார் !! தானே வலி நடத்துவதற்கும் பணம் பண்ணுவதற்கும் !! அரசாங்க பல்கலை கழகங்களில் நமது சமுதாயத்திற்கு இடம் கிடைப்பது நமது சமுதாயத்திற்கு இந்த நாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் !! தலைவன் என்பவன் நமது உரிமைக்கு போராட வேண்டியவன் !! சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சுய நலத்திற்கு வசதிகளை ஏற்படுத்தி கொள்பவன் கிடையாது !!
தங்கச்சி தமிழச்சிஅனிதாபலரும்பல
வியாக்கணம் செய்யலாம்அவரகள் வீட்டு
சாவுஇல்லையே,அனிதாவின் மரணத்துக்குகாரணமானநாற்காலி
சண்டையும்,பிஜெகாவிகலும்,நீதியும்
செய்தபடுகொலை,அனிதாவின் ஆத்மா
சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!
எதற்கு எடுத்தாலும் தற்கொலை என்பது தமிழ் நாட்டின் சாபக்கேடு என்று சொல்வதும் தவறு. மடையர்கள் என்று சொல்வது மிகவும் பொருந்தும் .தமிழ் திரைப்படங்களில் வரும் காட்சிகள் தற்கொலையை சர்வ சாதாரணமாகி விட்டன. அங்குள்ள பள்ளிகளில் எப்படி பட்ட ஆலோசனைகள் பள்ளி பிள்ளைகளுக்கு அளிக்கப்படுகின்றன? அனிதாவின் இறப்பு விரக்தியின் உச்ச கட்டம்.
இந்தியாவிலேயே தாய் மொழியில் கல்வி கொடுக்காத ஒரே மாநிலம் இந்த தக்க தமிழ் நாடு தான் ..கூடவே கல்வியை வியாபாரம் ஆக்கியதும் முதலில் இங்கு தான் …சாராய விற்பனை ..பெட்ரோல் விட்பனை …சினிமா கொட்டகை ..ஹோட்டல் …கல்லூரிகள் …ஆகிய வற்றில் ஈடுபடாத தகர தமிழ் நாட்டு அரசியல் வியாதிகள் எவரும் இன்று இல்லை ..சிறு குலைந்திகள் கூட டாடி ..மம்மி ..ஆண்ட்டி என்று அழைப்பது தான் இங்கு இப்பொது நாகரிகம் ..தமிழ் என்றோ அங்கு அழுகி ..மறைந்து விட்ட்து ..முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே கூட தமிழ் கொலையாம் ..பெயர் மாத்திரம் தமிழ் நாடு ( என்ஜின் இல்லாத கார் மாதிரி ) சவடாலுக்கு மாத்திரம் குறைச்சல் இல்லை
எங்கே நம்ப நண்டு பொண்ணு ரங்கத்த ரொம்ப நாளாவே காணாம்…………. ?
மலேசியாவிலும் நம்ம டாகடர் அனிதாவுக்காக போராடடம் நடத்தினால் ,தமிழர்களின் ஒற்றுமை பலப்படும் .அனிதாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
மனதை உருக வைத்து விடாது அனிதாவின் மரணம் .நல்ல மருத்துவரை இழந்து விட்ட்து தமிழ் சமுதாயம்