லக்னோ, உலகின் ஏழு அதிசயங்களில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும்.ஆனால் அந்த் மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மகால் பெயர் இடம் பெற வில்லை.உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ளஇந்த சுற்றுலா கையேட்டில் புகழ் பெற்ற கங்கா ஆரத்தி யை அட்டைபடமாக கொண்டு உள்ளது.ஆனால் மாநிலத்தின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் தாக்மகாலின் பெயர் காணப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலை காண 60 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகின்றனர். இந்த மாநிலத்திற்கு இதன் மூலமே அதிகபடியான வருவாய் வருகிறது.
கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதியானந்த் கூறும் போது நமது இந்தியா கலாச்சாரத்திற்குடபட்டது ராயாமணமும் கீதையும் தான் தாஜ்மகால் அல்ல என குறிப்டுபிட்டு இருந்தார்.
எனினும், யுனெஸ்கோவின் “உலக பழம்பெரும் தளமாக” தாஜ் மஹால் பெயரிடப்பட்டது, இது பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையான இந்தியா கீழ் பட்டியலிடப்பட்ட 10 சின்னமான இடங்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிட தக்கது.
-dailythanthi.com
காலம் மாறுது! கருத்தும் மாறுது!