அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. சாதித்து காட்டியது கேரளா!

திருவனந்தபுரம் : கேரளாவில் 6 தலித்துகள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதன் கீழ் 1248 கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தற்போது எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இவர்களில் 6 பேர் தலித்துக்கள். இவர்கள் முழு நேர மற்றும் பகுதி நேர அர்ச்சகர்களாக செயல்படுவார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற முழக்கம் முதன் முதலில் தமிழகத்தில்தான் எழுந்தது.

இதையடுத்து திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனாலும் நடைமுறையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராதல் என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: