டெல்லி: மத்திய அரசின் ‘ஏக்பாரத்’ என்ற இணையதளத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த வெப்சைட்டில், இந்தியாவின் கலாசாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாசாரங்கள், பண்பாடு, பண்டிகைகள் படத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
கலாசார பெருமை
இந்த இணையதளத்தின் நோக்கங்கள் என்ற பிரிவில், மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு வகையான கலாசாரங்கள் இருப்பதை பெருமையாக அது குறிப்பிட்டுள்ளது.
அனைத்து மொழிகள்
வெப்சைட்டின், முகப்பு பக்கத்தில், ‘ஏக்பாரத் சிரேஷ்ட பாரத்’ (ஒரே இந்தியா சிறந்த இந்தியா) என்று ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
செம்மொழி எங்கே?
ஆனால், செம்மொழியான தமிழ் மொழிக்கு அதில் இடம் இல்லை. நம்மை விட குட்டி மாநிலமான கேரளாவின் மலையாளம் கூட முகப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், கல் தோன்றி, மண்தோன்றா காலத்தே உருவான தமிழுக்கு அங்கு இடமில்லை.
இதுதான் ஒற்றுமை வளர்ப்பா?
மாநிலங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது நோக்கம் என்று அடைமொழி கொடுத்துக்கொண்டுள்ள வெப்சைட்டில், தாய் போல மொழியை போற்றும், மிக முக்கியமான ஒரு மாநிலதின் தாய் மொழி இல்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து, தமிழுக்கு உரிய, உயர்ந்த இடத்தை கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
தமிழிசையும், ராஜாவும் சந்தோஷப்படுவார்கள். தமிழகத்தில் ஆட்சி இல்லையென்றால் பா.ஜ.க. என்ன செய்யும் என்பது இப்போது புரியும்!
வடமாநிலத்தவனின் இச்செயல் சோவியத் யூனியன் நிலைக்கு இந்தியாவை இட்டுச்செல்லும் .ஒன்று படுவோம் .மொழியையும் இனத்தையும் காப்போம் .
தகர தமிழ் நாடடை எவரும் மதிப்பது இல்லை …சூடு சுரணை இல்லாமல் …இலவச பிரியாணி குவார்ட்டர் கொடுத்தால் ,,வேலைக்காரியை கூட முதல் அமைச்சர் ஆக்க தயார்
இந்த பிறவிகளுக்கு தமிழே மறந்து போய் விட்ட்து பிறகு எதட்கு அறிவிப்பு ?