இந்தியா போன்ற நடுத்தர வருவாய் நாடுகளில் 10 மருந்துகளில் ஒன்று போலியானது – உலக சுகாதார அமைப்பு

இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்  10 மருந்துகளில் ஒன்று குறைபாடு உள்ளது அல்லது போலியானது என  உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது  அதாவது இந்த நாடுகளில் விற்பனை செய்யப்படும்  மருந்துகளில் 10.5 சதவீதமருந்துகள் போலியானவையாகும்.

உலக சுகாதார அமைப்பில் ஆய்வு அறிக்கை படி  இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன.ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு பொறுப்பாகவும் உள்ளது.

தரக்குறைவான மற்றும் தவறான மருந்துகள் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதிக்கின்றன,  என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அத்னோம் கெபிரேயஸ் கூறி உள்ளார்.

2013 ஆம் ஆண்டிலிருந்துஉலக சுகாதார அமைப்பு தரக்குறைவான அல்லது போலியான  தயாரிப்புகள் குறித்த  1,500 அறிக்கைகளை பெற்று உள்ளது.

மலேரியாவுக்கு எதிரான மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள்  சுமார் 65 சதவீதம் போலியான மருந்துகள் என கூறப்படுகிறது.

இத்தகைய அறிக்கைகள்  பெரும்பாலானவை (42 சதவீதம்) உலக சுகாதார அமைப்பு ஆப்பிரிக்க பிராந்தியம்,   அமெரிக்காவின் உலக சுகாதார அமைப்பு  பிராந்தியத்திலிருந்து 21 சதவிகிதம், மற்றும் உலக சுகாதார அமைப்பு  ஐரோப்பிய பிராந்தியத்தில் 21 சதவிகிதம் வந்து உள்ளது.

பெரிய  நாடுகளில்  கிடைக்கும் மருந்துகள் தரமானதாக இருந்தாலும் அது நோய்களை முழுவதும் குணப்படுத்துவது இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில்  உலக சுகாதார அமைப்பு புற்றுநோய் மருந்துகளில் இருந்து கருத்தடை வரை, நுண்ணுயிர் எதிர்ப்பிகளில்  இருந்து தடுப்பூசிகள் வரை  எல்லாவற்றையும் உள்ளடக்கி அனைத்து சிகிச்சை பிரிவுகளிலும்  தரக்குறைவான அல்லது போலியான மருத்துவ பொருட்கள் பற்றிய அறிக்கையை பெற்றுள்ளது.

15 ஆண்டுகளுக்கு பிறகு  உலகளாவியமருந்துகள்   விற்பனை  முதல் தடவையாக 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளன எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

-dailythanthi.com

TAGS: