ஒகி புயல் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய மந்திரியிடம் மீனவர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி,

வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், புயல் பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று கன்னியாகுமரி சென்றார். அவரிடம் கன்னியாகுமரியின் கிராத்தூரில், 254 படகுகளில் சென்ற 8 கிராமங்களின் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில், மீனவர்களின் ஜி.பி.எஸ். தகவல்களும் அளிக்கப்பட்டு உள்ளன.

அந்த மனுவில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மீனவர்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும். ஒகி புயல் பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டியலை பெற்று கொண்ட நிர்மலா சீதாராமன், போர்க்கப்பல்கள் கொண்டு மீனவர்களை தேடும் பணி நிறுத்தப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

-dailythanthi.com

TAGS: