பார்த்ததும் பார்த்தோம் இப்படியொரு பண்பாட்டை பார்த்ததில்லை.. மிரண்டு போன பீட்டா..

அன்றாட தினசரி செய்திகளில் பெரும்பான்மையாக இடம் பிடிக்கும் செய்தி ஒன்று உண்டு! “ காதலனுடன் பெண் ஓட்டம். போலீசில் புகார்” என்ற செய்தி, தற்போதும் தொடர்கதையாகத் தான் இருந்து வருகிறது.

நடக்கும் இடங்கள் வேறு தானே ஒழிய சம்பவமும், காதலர்களின் மனங்களும், எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

இது ஏதோ, தற்காலத்தில் மட்டும் நடக்கும் சங்கதி என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். சங்க காலத்திலேயே இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தேறி உள்ளன.

சங்க காலத்தில், தன்னிடம் சொல்லாமல் கொல்லாமல், தன் காதலனுடன் சென்று விட்ட தன் மகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள் ஒரு தாய். பார்ப்பவரிடமெல்லாம், தன் மகளின் அங்க அடையாளங்களைக் கூறி, அவளை எங்காவது பார்த்தீர்களா? என்று அழுகையுடன் விசாரித்துக் கொண்டிருக்கிறாள்.

அவர்கள், பார்க்கவில்லை என்று பதில் அளிக்கிறார்கள். அந்தத் தாயின் பரிதாப நிலையைக் கண்ட, வழிப்போக்கனான ஒரு வயதான முதியவர், அந்தத் தாயிடத்தில் வந்து அவளுக்கு, ஆறுதல் கூறுகிறார்.

“அம்மா, சந்தனம் மலையில் விளைந்தாலும்,  அது மலைக்குப் பயன்படுவதில்லை. அதனை வாசனைத் திரவியமாகப் பூசிக் கொள்பவர்களுக்கே, அது பயன்படுகிறது. முத்து, கடலில் தான் பிறக்கிறது.

ஆனால், அந்த முத்து கடலுக்குப் பயன் படுவதில்லை. அதனை ஆபரணமாக அணிபவர்களுக்கே பயன்படுகிறது.

குழலிலும், யாழிலும் வரும் இசை, அந்த யாழுக்குப் பயனையோ, புகழினையோ சேர்ப்பதில்லை. மாறாக, அதைத் திறம்பட வாசிப்பவனுக்கும், அதை இசைiயாகக் கேட்பவனுக்கும் தான் அந்த யாழ் இசையாகப் பயன்படுகிறது.

அது போலத் தான் உன் மகளும். அவள் உன் வயிற்றில் பிறந்தாலும், அவள் சென்று சேர வேண்டியது அவள் கணவனிடத்தில் தான். அந்தக் கணவனை அவளே தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அவ்வளவு தான்.

இதற்காக, நீ அவளைத் தேடிச் சென்று ஒரு பயனும் கிடைக்கப் போதில்லை. அது உனக்கு மன வருத்தத்தைத் தான் தரும். நீ உன் வீட்டிற்குத் திரும்பிச் செல். தானாகச் சென்றவள்.

இன்னும் சிறிது காலம் கழித்து, தன் தவறை உணர்ந்து வருந்தி, திரும்பி நிச்சயம் ஒரு நாள், உன்னைக் காண வருவாள்” என்று சொல்லி, பெண்ணைப் பெற்ற ஒரு தாயின் துயரம் துடைப்பதற்காக, ஆறுதல் மொழிகள் கூறுவதைக் கலித்தொகையில் பாடலாகவே பாடப்பட்டுள்ளது.

நல்லந்துவனார் என்பவர் இந்த கலித்தொகையை இயற்றியுள்ளார். கி.பி.300-ல் இந்த இலக்கியத்தை அவர் இயற்றி உள்ளார். இந்தக் கலித்தொகையில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.

நச்சினார்க்கினியார் இந்த நூலுக்கு உரை எழுதி இருக்கிறார். தாமோதரன் பிள்ளை என்பவர் தான், கலித்தொகையை முதன் முதலில் நூலாக வெளியிட்டார்.

கலிப்பாவினால் ஆன கலித்தொகை, இசைத்தன்னை கொண்டது. மற்ற சங்க கால இலக்கியங்கள் எல்லாம், இயற்கை, மண், மன்னன், அவனது போர்த்திறன் போன்றவைகளைப் பற்றிக் கூறும் நிலையில், இந்த கலித்தொகை நூல், இதிகாசப் புராணங்களைப் பற்றி அதிகமாகக் கூறுகிறது.

ஒரு சிறந்த உவமைகளாக இந்தக் கலித்தொகைப் பாடல்கள் கையாளப் பட்டிருக்கின்றன. நடப்பியல் பாடல்கள் மலிந்த சங்கப் பாடல்களை கொண்ட நூல் இது ஒன்று தான், என்பதில், இதன் கௌரவம் மிகுந்திருக்கிறது.

எல்லாப் பாடல்களும் ஒரே மாதிரி இல்லாமல், சில பாடல்கள் உரையாடலைப் போல இயற்றப் பட்டுள்ளன.

சில பாடல்கள் ஓரங்க நாடகம் போன்ற தன்மையை வெளிப் படுத்துகின்றன. ஆயர் குலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏறு தழுவியதைப் பற்றிய பெருமளவு செய்திகள் இதில் அடங்கியுள்ளன.

அந்த ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் பெண் எருமையின் கொம்பைத் தெய்வமாகப் போற்றி வணங்கினர். திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக இந்த எருமைக் கொம்பைத் தெய்வமாக வணங்குவதை மரபாகக் கொண்டிருந்தனர்.

அதன் பின்னரே, திருமணம் நடைபெற்றது. கன்னிப் பெண்கள், தை மாதத்தில் நோன்பிருந்தனர். வித்தியாசமான மரபு நடைமுறைகளைப் பற்றி இந்த கலித்தொகை நூலில் அதிகமாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது!

“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்”

எனும் கலித்தொகைக் குறிப்பு ஆயர்மகள் தனது காதலன் ஏறு தழுவும் வீரியம் உடையவனாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லையெனில் மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக கொள்ள மாட்டாள் என்று கூறுகிறது. இதன் மூலம் காளைகளுக்கும் ஆயர் மக்களுக்கும் இருந்த உறவைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களது செல்வமே கால்நடைகள் தாம். `மாடு’ என்ற சொல்லுக்கு ’செல்வம்’ எனும் பொருள் தமிழில் உண்டு. இதனை திருவள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

இன்று ஜல்லிக்கட்டுக்காக உலகமே வெகுண்டு எழுகிறது என்றால், இவ்வாறான தொன்மை தான் காரணம். கலித்தொகை போன்ற பாடல்கள் இன்னும் வேறு எந்த மொழியிலும் உருவாகவில்லை என்பது மேலும் தமிழின் பெருமைக்கு உரம் சேர்க்கும் விசயமாகும்.

பீட்டா அமைப்பு எதிர்ப்பது வதை என்ற சொல்லை வைத்து தான். இன்னமும் தொன்மை பண்பாட்டை கண்டு பல அமைப்புகளும் வியந்து நிற்கின்றன.

-athirvu.com

TAGS: