சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கருத்துக் கணிப்பில் ரஜினியின் செல்வாக்கு பிற நடிகர்களோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்த ஒரு சுவாரசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.
ராஜநாயகம் அணி
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் கிடைத்த விவரங்கள் பற்றி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ராஜநாயகம் கூறியதாவது: இப்போது வாக்களித்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிகம் பேர், தினகரனுக்குதான் வாக்களிப்போம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
மற்றொரு சுவாரசியம்
இதில் மற்றொரு சுவாரசிய தகவலும் உள்ளது. நடிகர் விஷாலுக்கு 15.2 சதவீதம் மக்கள் ஆதரவு அளித்துள்ளார்களாம். இவர் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்து கடைசிவரை இழுபறிக்கு உள்ளாகி வேட்புமனு தள்ளுபடிக்கு ஆளானவர். மக்கள் கருத்தை வைத்து பார்த்தால் விஷால் போட்டியிருந்தால் களம் வேறு மாதிரி மாறியிருக்கும் என தெரிகிறது.
ரஜினிக்கு குறைவு
அதேபோல விஜய்க்கு 11.3 சதவீதமும், கமலுக்கு 10.7 சதவீதமும், ரஜினிக்கு 5.1 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.இதில் கவனிக்க வேண்டியது ரஜினிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவுதான். ‘நீண்ட காலமாக’ அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக சொல்லி வரும் ரஜினி, விஷால், விஜய் போன்ற இளம் நடிகர்களைவிடவும் குறைவான அரசியல் செல்வாக்கு பெற்றுள்ளதாகவே இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
செல்வாக்கு இப்படி
ரஜினி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் அரசியலில் இறங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்து ஏமாந்தனர். மக்கள் மன்றத்தில் ரஜினி அரசியல் செல்வாக்கு சரிந்துள்ளதால்தான் அவரும் அரசியலுக்கு வர தயங்குகிறாரோ என்ற கேள்விகளை எழுப்புகிறது இந்த கருத்து கணிப்பு.
ரஜினி என்கிற தனிமனிதனுக்கு செல்வாக்கு இருப்பதாக ஒருவித மாயையை உண்டாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொல்வாக்கில்லாத அவரின் ரசிகர்கள் தான் என்பது ரஜினிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அதனால் தான் தன்னுடைய புதுப்பட ரிலீசின் போதும் மட்டும் அவர் அரசியல் குறித்து வாயைத் திறப்பதும் பிறகு மூடிக்கொள்வதும் வழக்கம். அதுபோலத்தான் அடுத்தடுத்து வரவிருக்கும் 2.0 லூத்திக்கொள்ளக்கூடாது, மற்றும் காலா காலைவாரிவிடக்கூடாது என்பதற்காக வழக்கமாக விடும் வருவேன், ஆனா வரமாட்டேன் எனும் அறிக்கையை மீண்டும் தூசித் தட்டி வெளியே விட்டிருக்கிறார். ரஜினி ரசிகர்களின் மாயை என்று தணியுமோ அன்று அவர் இருக்க மாட்டார். மற்றபடி விஜய்க்கு இருக்கும் அரசியல் ஆதரவு கூட ரஜினிக்கு இல்லை என்பது வெட்கக்கேடான விஷயம் என்பது அவருக்கும் தெரியும்.
‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு ‘பவுன்’ தங்கக் காசு கொடுத்த தமிழன் ____ அற்றவன் அல்லவா? ஒங்குத்தமா அவங்குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல? திருந்தடா தமிழா…
ஏன் தான் தமிழ் நாட்டு தமிழன்கள் வெறி பிடித்து இவன் மேல் இருகிரன்கள் என்று தெரிய வில்லை. ஒவ்வொரு முறையும் தன் படம் வெளியாகும் பொழுது இவன் ரஜினிகாந்த் இப்படி வேசம் போடுவது இவனது வாடிக்கை. நமது நாட்டில் கூட ஒரு முறை வந்து இருந்தபொழுது ஒரு தொகை கொடுப்பதாக சொன்னான். இதை தொட்டு மறைந்த திரு. ஆதி. குமணன் அவரின் பார்வை பகுதியில் பகுதியில் இதை தொட்டு பல முறை எழுதி இருந்தார். நமது டி.எச்.ஆர் அறிவுப்பாளர்கள் ஒரு நாள் முழுதும் இவனின் பிறந்தநாளை வசை பாடிநான்கள். நமக்கு என்ன கிடைக்க போகிறது. நமது நாட்டிள் சுதந்திரம்திற்காக போராடிய துன். சம்பந்தனை பற்றி அவரின் பிறந்தநாள் அன்று என்ன செய்கிறான்கள். இந்த ரஜினிகாந் தமிழன்களுக்கு என்ன செய்து இருக்கான் இதுவரை. ஒருமுறை மறைந்த திருமதி. மனோரமா அவர்கள் கூட இந்த ரஜினிகாந்த் மீது அதிக விமர்சனம் செய்தார். அதாவது இவன் சம்பாதிக்கும் பணத்தை கர்நாடதாகத்தில் முதலிடு செய்து உள்ளன் என்று.
ரஜினியை சொல்லிக் குற்றமில்லை! இதெல்லாம் பத்திரிக்கைகள் செய்கின்ற அசிங்கங்கள்! பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்!
ரஜினி என்ற தனி மனிதன் உலக புகழ் பெற்று விலங்குவதற்கு தமிழ் தான் முக்கிய காரணம் ! தமிழ் சினிமா உலகெல்லாம் புகழ் பெறுவதற்கு இந்த தனி மனிதனின் பங்களிப்பு முக்கியமானது என்றால் அது தவறில்லை ! ஒரு தனி மனிதனின் வளர்ச்சியில் ஏன் இந்த வயித்தெரிச்சல் ! சினிமா ஒரு வியாபாரம் ! தமிழ் நாட்டு சினிமா வளர்ச்சிக்கு தமிழனை விட மற்றவர்கள் தான் அதிக பங்கு ஆட்ரி இருக்கிறார்கள் ! தமிழன் தன் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கே எதையும் செய்யாத சோம்பேறிகள் ! வழங்கள் ஆயிரம் இருந்தும் சிறப்புடன் வாழ தெரியாத ஜந்துக்கள் ! ஜாதி வெறியும் ! திருட்டு ! தில்லுமுல்லு !இதைத்தவிர வேறு ஏதும் தெரியாத சோம்பேறிகள் ! தன் சொந்த திறமையை கொண்டு ஊறு விட்டு ஊறு வந்து தெரியாத மொழியை கற்று கொண்டு ! கற்று தேர்ந்த அந்த மொழியிலேயே உலக புகழடைந்து ! உயர்ந்த நிலையில் வசதியுடன் செல்வாக்கோடு வாழும் ஒரு தனி மனிதனை பாராட்டும் மண பக்குவம் வரவேண்டும் !மும்பையில் மாற்று துணி இல்லாத ! ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழி இல்லாத ! சிவாஜி ராவ் என்ற இன்று உலக புகழ் பெற்ற ரஜினி என்ற தனிமனிதனை பட்றி கடல் கடந்து நாடு கடந்து இன்று நானும் நீங்களும் பேசுவதே அவரின் வளர்ச்சி !
ரஜினியை நான் குற்றம் சொல்ல மாட்டேன். தமிழன் அவரைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறான் என்பதாக திராவிட ஊடகங்கள் தான் செய்திகள் போடுகின்றன! தமிழர்களுக்கும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கும் நடக்கும் ஒரு வகையானப் போர் இது! தமிழனை மட்டம் தட்டும் போக்கை இந்த ஊடகஙள் கையாளுகின்றன!