பாஜகவை தனியாளாக திணறடித்த ஜிக்னேஷ் மேவானி.. அசத்தலாக வெற்றி பெற்றார்!

அஹமதாபாத்: குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்று இருக்கிறார். இவர் பாஜக வேட்பாளரை விட 19,696 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்று உள்ளார்.

குஜராத் தேர்தலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று ஹர்திக் பாட்டேல், அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூன்று பேர் பார்க்கப்படுகிறார்கள். இதில் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் தனித்து சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கிறார்.

குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து இவர் பலமுறை பேசியிருக்கிறார். உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பெரிய ‘உனா பேரணியை’ 2016ல் நடத்தி காட்டினார். இதில் 20,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இவர் தற்போது குஜராத்தின் முக்கிய தலைவராகவும், தலித் மக்களின் குரலாகவும் பார்க்கப்படுகிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் இருக்கிறது. அதேசமயத்தில் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு அளிக்கிறது.

இவர் போட்டியிடும் வட்காம் தொகுதியில் 95,497 வாக்குகள் பெற்று உள்ளார். பாஜக வேட்பாளர் சக்ரவர்த்தி விஜயகுமாரை விட19,696 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்று உள்ளார். எப்போதும் போல இந்த முறையும் தனி தொகுதிகளில் பாஜக கட்சி தோல்வியை சந்தித்து இருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: