ஆ.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில், செல்வி ஜெயலலிதாவை இறந்த பின்னர் தான் தினகரன் கோஷ்டி அப்பலோ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்று. சற்றும் வாய் கூசாமல், தற்போதைய முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபி ஆகியோர் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இதனை உடைக்கும் வகையில், தினகரன் கோஷ்டியினர் செல்வி ஜெயலலிதா அப்பலோவில் இருந்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டார்கள். இதனை அடுத்து மூக்கு உடைபட்ட நிலையில் ஓபி. மற்றும் முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பில் உள்ளார்கள். இதன் காரணத்தால், தினகரனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது என, அதிர்வின் தமிழக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோக அப்பலோ மருத்துவமனையில் செல்வி ஜெயலலிதா சுய நினைவில், இருந்தவேளை ஓபி மற்றும் எடப்பாடி ஆகியோர் சந்தித்து பேசியதையும் சசிகலா மற்றும் தினகரன் கோஷ்டி வீடியோ எடுக்க தவறவில்லை. இன் நிலையில் இவர்களது பேச்சு மேலும் பொய்யாகிப் போயுள்ளது. இது இவ்வாறு இருக்க, தமிழகத்தையே உலுப்பும் வகையில், தினகரன் சம்பந்தப்பட்ட 100 இடங்களில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில், சோதனை நடத்தினார்கள். இது சொத்துக் குவிப்பு தொடர்பான ஆதாரங்களை கைப்பற்ற அல்லது என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. இவர்கள் தேடி அலைந்தது இந்த வீடியோக்களை தான்.
இன்னும் சொல்லப் போனால், செல்வி ஜெயலலிதாவுக்கு சசிகலா உணவு ஊட்டிவிடுவதும். அவரை ஒரு தங்கை போல பராமரிக்கும் காட்சிகள் கூட வீடியோவாக உள்ளது. இதனை வெளியே விட்டால், தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த அதிமுக ஆதரவாளர்களும் மக்களும் சசிகலா- தினகரன் பக்கம் சாய்ந்து விடுவார்கள். இது இவ்வாறு இருக்க, தமிழக அரசை மட்டுமல்லாது மத்திய அரசை கூட எதிர்த்து அரசியல் செய்யும் பலம் எவ்வாறு தினகரனுக்கு கிடைத்தது என்று பலரும் நினைக்கலாம். அது அவ்வளவும் அவரிடம் உள்ள பணம். தமிழ் நாட்டில் பல நூறு சாராய ஆலைகள் இவர்களுடையதே. இதனூடாக அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 கோடி வருமானம் உள்ளது என்கிறார்கள். இன் நிலையில் அம்பாணி டாடா ரேஞ்சுக்கு பணம் வைத்திருக்கும் சசிகலா -தினகரன் கோஷ்டி அதனை ஒரு போதும் வெளிக்காட்டியதே இல்ல.
இந்த அளவு பெருந்தொகையான பணத்தை அவர்கள், கையாள்வது. அதனை மறைத்து வேறு இடங்களில் பதுக்குவதிலும் இவர்களை மிஞ்சிய கில்லாடிகள் எவரும் இல்லை எனலா. ஆர்.கே நகரில் உள்ள மொத்தம் 1 லட்சம் வாக்காளர்களுக்கு 100 கோடி ரூபா பணத்தை பிரித்து பணப்பட்டுவாடா செய்துள்ளார்கள். இதனால் பலர் தினகரனுக்கு வாக்கு போட உள்ளதாக அறியப்படுகிறது. எனவே 24ம் திகதி வெளியாகவுள்ள, முடிவில் தினகரன் வெற்றிபெற்றதாக அறிவிப்பு வந்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இன் நிலையை திமுகாவால் கூட சமாளிக்க முடியாமல் உள்ளது என்பது தான் பெரும் கவலைக்குரிய விடையமாக உள்ளது. தினம் தோறும் 1,000 பேரைப் பிடித்து , அவர்களை தொலைக்காட்சி பேட்டிக்கு என்று அழைத்துச் சென்று, சும்மா பீலா காட்டி. பின்னர் அவர்கள் அனைவருக்கு தொகுதிக்கு வெளியே வைத்து பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார் தினகரன். இப்படி கடந்த 20 நாட்களாக நடந்துள்ளது என்கிறார்கள்.
அதிர்வுக்காக
கண்ணன்.
-athirvu.com