நாம் தமிழர் கட்சிக்கு வளர்ச்சி.. பாஜகவுக்கோ மாபெரும் தளர்ச்சி!

சென்னை: நாம் தமிழர் கட்சி, நோட்டா ஆகிவற்றுடன் ஒப்பிடுகையில் கடந்த 2016 பொதுத் தேர்தலின்போது பாஜக நிலைமை ஆர்.கே.நகரில் ஏதோ பரவாயில்லை என்றுதான் இருந்தது. ஆனால் இந்த முறை பயங்கர மோசம் என்றாகியுள்ளது.

நோட்டாவுக்கு கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குகள் குறைந்துள்ளன. அதை விட பாஜகதான் பெரும் அடி வாங்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை கடந்த முறை வாங்கிய வாக்குகளை விட அதிகம் பெற்று தாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதைக் காட்டியுள்ளனர்.

தேர்தலின்போது 1298 வாக்குகள் வாங்கி 3வது இடத்தைப் பிடித்திருந்தார் (நிஜமாதான் பாஸ்). அடுத்து 2016 பொதுத் தேர்தலில் 2918 வாக்குகளாக இது உயர்ந்தது. 5வது இடம் கிடைத்தது.

நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள்

2011 தேர்தலில் நோட்டா கிடையாது. 2016 தேர்தலில் நோட்டாவுக்குக் கிடைத்த ஆதரவு 2865 வாக்குகள் ஆகும். பாஜகவுக்கு அடுத்த இடத்தை அது பிடித்திருந்தது. ஆனால் தற்போதைய இடைத் தேர்தலில் 2373 வாங்கி பாஜகவை வீழ்த்தியுள்ளது நோட்டா. பாஜகவுக்கு வெறும் 1417 வாக்குகளே கிடைத்துள்ளன. விநாயகம் காலத்துக்குப் போய் விட்டது பாஜக.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி

மறுபக்கம் நாம் தமிழர் கட்சி ஸ்டெடியாக வளர்ந்து வருகிறது. 2011 இடைத் தேர்தலில் அது இல்லை. 2016 பொதுத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் தேவி பெற்ற வாக்குகள் 2503 வாக்குகளாகும். வாக்கு சதவீதம் 1.44 ஆகும். இப்போதைய தேர்தலில் அது பெற்றுள்ள வாக்குகள் 3860. அதாவது 2.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

தினகரன் அலையிலும் வளர்ச்சி

ஜெயலலிதா காலத்திலேயே குறைந்த வாக்குகள்தான் பெற்றிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால் தினகரன் அலையிலும் கூட அது தனது வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: