சமீப காலமாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்துள்ளது. கமல், விஷால், ரஜினி, ராகவா லாரன்ஸ் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் மூத்த இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் விரைவில் தீவிர அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியிருப்பதாவது..
“ரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.”
“எனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நான் நேரடி அரசியலில் பங்கேற்பது குறித்து அறிவிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
-cineulagam.com