கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை திறக்கக் கூடாது.. உதயக்குமார் வலியுறுத்தல்!

சென்னை: கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகளை திறக்க அணுஉலை எதிர்ப்பாளரான உதயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அணுஉலை எதிர்ப்பாளரான உயதக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூடங்குளத்தில் 3,4,5வது அணுஉலைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என அவர் கூறினார்.

மேலும் ஏற்கனவே தொடங்கப்பட்ட முதல் 2 அணு உலைகள் குறித்து சார்பற்ற விசாரணை நடத்தி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணுஉலைகளின் தரம் மற்றும் அவற்றின் நஷ்டம் குறித்து அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் கூடுதல் அணுஉலைகள் திறக்கக்கூடாது என அவர் கூறினார்.

போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் கன்னியாகுமரி சரக்கு பெட்ட துறைமுக திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு வரிந்து கட்டி செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இணையம் துறைமுக திட்டத்தை கன்னியாகுமரி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்து மக்கள் கருத்தை கேட்காமல் மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த திட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சாதி மத கலவரத்தை தூண்டியாவது இணையம் திட்டத்தை செயல்படுத்த சில அமைப்புகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். இணையம் துறைமுகத் திட்டத்தை அவசரகதியில் மக்கள் மீது திணிக்கக்கூடாது என்றும் உதயக்குமார் கூறினார்.

tamil.oneindia.com

TAGS: