விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்..

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கிரண் குமார் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள சிவன் பிள்ளை நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை பொறியியல் முடித்துள்ளார். மேலும், மும்பை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த சிவன் பல்வேறு திட்டங்களில் திறம்பட பணியாற்றியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சிவன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றார். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித்துறை செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.com

TAGS: