சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை கேள்வி கேட்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதுபோல செய்வது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாருமே இதைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்களுக்கும் கூட காதல் திருமணம் செய்வோரை கேள்வி கேட்கும் அதிகாரம் கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

18 வயது நிரம்பியோர் தாராளமாக மனம் விரும்பி தமது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அப்படிச் செய்வது சட்டவிரோதமான செயலாகும். மாறாக இதுபோல திருமணம் செய்தவர்களை பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று கூறி தண்டிப்பது, ஊரை விட்டு விலக்கி வைப்பது போன்றவை சட்டவி்ரோதமானவை.

மத்திய அரசு உடனடியாக காதல் திருமணம் செய்வோரைக் காக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்ய மத்திய அரசு தவறினால் கோர்ட் தலையிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், இந்த அதிரடி உ.த்தரவை இன்று பிறப்பித்தது.

tamil.oneindia.com

TAGS: