பெங்களூரு,
தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்துவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று கர்நாடக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மன்னிப்பு கேட்க வேண்டும்
மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு கோவா பா.ஜனதா அரசு அநீதி இழைத்து வருகிறது. அந்த மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி வினோத் பாலேகர் கன்னடர்கள் பற்றி தவறாக பேசி இருக்கிறார். அவருடைய கருத்து நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கன்னடர்களை அவமானப்படுத்திவிட்டார். கோவா மந்திரி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கோவா அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும்.
கர்நாடக எல்லைக்குள் வந்து கனகும்பி பகுதியில் பணிகளை ஆய்வு செய்ய கோவா மந்திரிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?, அவரை அனுமதித்தது யார்?. அவருடைய நோக்கம் என்ன?. இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதா?. ஆய்வு நடத்துவதாக இருந்தால் 2 மாநிலங்களின் மந்திரிகளும், அதிகாரிகளும் இருந்திருக்க வேண்டும். கோவா அரசுக்கு கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை இல்லை. இதுபற்றி கேள்வி எழுப்ப நமது மாநில அரசுக்கு பொறுப்பு இல்லையா?.
தண்ணீர் இல்லை
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டினர் கோவா மந்திரியை போல் கேவலமாக நடந்து கொண்டது இல்லை. காவிரி நீரை திறந்துவிடுமாறு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். காவிரி அணைகளில் தண்ணீர் இல்லை.
தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் கொடுக்க முடியும்?. தமிழகத்துக்குகு காவிரி நீரை திறக்கக்கூடாது. ஒருவேளை தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடகத்தில் போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.
-dailythanthi.com
எங்கேயா இங்க ரஜினு என்று ஒரு மானஸ்தன் இருந்தான்…ஆளையே காணோம்????
he he he
but tasmak crowd are ready to support Rajani actor.