பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம் ;பஸ்கள் சிறைபிடிப்பு

சென்னை,

பஸ் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கள் கிளம்பியது.   நேற்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இன்று  2-வது நாளாக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் மாணவர்கள் பஸ்களை சிறை பிடித்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

  • புதுக்கோட்டை அரசு  மன்னர்   கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை  புறக்கணித்து கல்லூரி   முன்பு  அமர்ந்து தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அறந்தாங்கி  அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் 600-க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்   இன்று  காலை  திடீ ரென்று    வகுப்புகளை   புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

  • ஆரல்வாய்மொழியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

  • தஞ்சையில் இன்றும் குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி கேட் முன்பு அமர்ந்து  கோஷங்களை எழுப்பினர்.

  • கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து இன்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைகல்லூரியில் மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.

  • விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவ, மாணவி கள் இன்று காலை அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

  • திண்டுக்கல்- நத்தம் சாலையில் ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில் இன்று காலை கல்லூரி மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அரசு பஸ்களை சிறை பிடித்தும், பஸ்கள் முன்பு படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் தவமணி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமு தலைமையில்  பஸ் மறியல் செய்தனர்.

  • கடலூர் மாவட்டம் விருத் தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு   மாணவர்கள் சிலர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுட்டனர்.

  • குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குழித்துறை, திருவட்டார், களியல், தெங்கம்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட பாரதீயஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

-dailythanthi.com

TAGS: