தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார்.. விஜயேந்திரரை கைது செய்யுங்கள்.. போலீஸில் புகார்!

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துவிட்டார் என விஜயேந்திரர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்றனர்.

ஆர்வலர்கள் கொந்தளிப்பு

ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். இது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸில் புகார்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரை கைது செய்யக்கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயேந்திரர் மீது புகார்

ஹனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்த ராமபூபதி என்பவர் சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்யனும்

தமிழக அரசு சின்னங்களை விஜயேந்திரர் அவமதித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சின்னங்களை அவமதித்துவிட்டதாக விஜயேந்திர மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் ராமபூபதி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

விஜயேந்திரரை கைது செய்யுங்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் அவமதித்த வழக்கில் உடனடினயாக விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: