காஞ்சிபுரம்: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் உக்கிரமான போராட்டங்கள் தொடருகின்றன. இதனால் காஞ்சி சங்கராச்சாரியார்களை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்து 3 நாட்களாக சங்கர மடத்திலேயே பாதுகாத்து வருகிறது போலீஸ்.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர். இது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் சங்கர மடங்களை முற்றுகையிட்டும் விஜயேந்திரர் உருவபடம், கொடும்பாவிகளை எரித்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. விஜயேந்திரருக்கு எதிராக பல இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகமும் சங்கர மடங்களை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தொடர்ச்சியான இந்த போராட்டங்களைத் தொடர்ந்து சங்கரச்சாரிகளான ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரையும் மடத்தை விட்டு வெளியே வரவே கூடாது என போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் தங்களிடம் அனுமதி பெறாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் ஏராளமான போலீசார் சங்கர மடத்தின் முன்பாகவும் 3-வது நாளாக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரச்சாரிகள் இருவரும் சங்கர மடத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசெயேந்திரர் செயலை – மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடும் கண்டனம்
சென்னையில் பேராசிரியர் அரியரன் எழுதிய நூல் வெளியீடு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்கையில், காஞ்சி இளைய மடாதிபதி விசெயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்ததை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது என அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி பதிவு செய்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட போது எழுந்து நிற்காமல் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது மட்டும் எழுந்து நின்றது, திட்டமிட்டே எங்கள் தாய்த்தமிழையும் உலக தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதன்மை மதுரை ஆதினம் கூட தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்க வேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கிறது. இவர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா..?
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் போது எந்த இடத்திலும் யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டும் என்ற பொதுநிலை மரபு உள்ளது.
அதை அவமதித்த செயலை எண்ணி வருந்தாமல், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் மரபு இல்லை” என்று காஞ்சி சங்கர மடம் அறிவித்தது இவர்கள் மத வெறியையும் யார் என்ன செய்ய முடியும் என்ற திமிரையும் காட்டுகிறது என்றார் திரு. பாலமுருகன்.
தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு அறியாமை தமிழர்களை தம் ஆரிய சூழ்ச்சியில் மயக்கி, சாதியினாலும் மதங்களாலும் பிளவுபடுத்தி, தன் மத வெறியை திணித்து, மூட நம்பிக்கையை விதைத்து, அனைத்து இழி வேலைகளும் செய்து காவி உடையில் தமிழர்ளுக்கு எந்நேரமும் எதிராகவே செயற்ப்பட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் இவர்களை போன்றோரை தமிழக தமிழர்கள் அண்மையில் வந்த புதுப் பாடல் வரிகள் போல “விரட்டி விரட்டி வெளுக்க வேண்டும்” என்று மலேசிய நாம் தமிழர் இயக்கம் கேட்டுக்கொள்வதாக பேராக் மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
திமிர் பிடித்த சங்கராச்சாரியர்களின்
படத்தை வைத்து செருப்பு,துடைப்பை
கட்டை பூசைசெய்கிறார்கள்,
மடத்தைவிட்டு வெளியாகமல்
சிறைவைக்கப்பட்டுள்ளார்!