டாஸ்மாக்கிற்கு ஆதரவா? நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

அரசியல் கட்சியை துவங்கிய பிறகு கமல்ஹாசன் தொடர்ந்த மக்களை சந்திப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை அவரது கட்சியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளார்.

சமீபத்தில் மது பற்றி பேசிய கமல்ஹாசன் மது ஒழிப்பு சாத்தியமில்லை அதற்கு நான் ஆதரவளிக்க மாட்டேன் என கூறியதாக செய்திகள் வெளியானது.

இன்று மாணவர்கள் மத்தியில் பேசிய கமல், ‘மது இல்லாமல் இருக்கமுடியாது என்ற நிலைமையை அரசியல்வாதிகள் உருவாகிவிட்டனர். திடீரென மதுவிலக்கு என்றால் மக்கள் வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாக வாய்ப்புள்ளது அதனால் மதுவை தடை செய்ய முடியாது அதை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும்’ என கூறினார்.

மேலும் டாஸ்மாக்கிற்கு கமல் ஆதரவு என ஊடகங்களில் வந்த செய்தி தவறு என ட்விட்டரில் கூறியுள்ளார்.

-cineulagam.com