சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி சாலை திட்டமான பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து சீமானின் கண்டனவுரை.
நாம் கேட்டது காவிரியில் தண்ணீர். ஆனால் இவர்கள் தருவது ஏர்போர்ட். சேலத்தில் இவ்வளவு நாட்கள் நாம் விமானத்தில்தான் வந்து கொண்டிருந்தோமா? ஏற்கனவே 160 ஏக்கரில் விமான நிலையம் இருக்கிறது. அங்கு ஒரே ஒரு விமானம் சென்னையிலிருந்து தான் வரும். அதற்கு 160 ஏக்கரே அதிகம். இதில் திரும்பவும் 560 ஏக்கர் எதற்கு. எந்த நோக்கத்திற்காக, எண்ணத்திற்காக, லாபத்திற்காக இந்த விரிவாக்கம் செய்யப்படுகிறது. சேலத்தில் 1000 ஏக்கருக்கு ஒரு குப்பைமேடு இருக்கு. அங்க இருக்க 500 ஏக்கர் இல்ல 5000 ஏக்கர் கூட எடுத்துக்க அங்க போய் ஏர்போர்ட் கட்டிக்கங்க நாங்க ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் எங்க விளைநிலத்தை தொட்டா வெட்டி புதைத்து விடுவேன். நீ விமானத்தில் பறக்கலாம் ஆனால் பசி எடுக்காமல் இருக்காது. தாகம் எடுக்கமால் இருக்காது. வானுர்தியில் உட்கார்ந்த பிறகு நீ தண்ணீர் கேட்ப அந்த தண்ணீர் எங்க பூமியில் இருந்து தான் வரும். இருக்கிற விளைநிலங்களே கொஞ்சம் தான். அதில் போய் எட்டு வழி சாலை அமைக்கிறேன் 80 வழி சாலை அமைக்கிறேன் என்றால் உன்னை கீழே படுக்க போட்டு தான் ரோடு போடுனும். வேற வழியே கிடையாது. நீங்கள் எங்களை மிரட்டல், அச்சுறுத்தம், பயமுறுத்தல் என்ன செய்தாலும் ஒரு பிடி மண்ணை கூட ஏர்போட் விரிவாக்கத்துக்கு கொடுக்க முடியாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களைத் தாண்டிதான் வர வேண்டும். அதனால் ஒரு பிடி நிலத்தை கூட கொடுக்க முடியாது. கந்தசாமி என்கிற விவசாயி இறந்துவிட்டார். ஏன்? ஏற்கனவே 160 ஏக்கர் வானுர்தி நிலையும் அமைக்க எடுத்த இந்த இடத்திலே அவருடைய 4 ஏக்கர் போய்விட்டது. உடனே இழப்பிடு என் நிலத்தை எடுத்து கொண்டு இழப்பிடு தர நீ யாரு? என் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து காட்டை திருத்தி, சமைத்து, உழுது, தெள்ளு புழுதியாக்கி இதை விளைநிலைமாக மாற்றுவதற்கு பல தலைமுறைகள் பாடுபட்டுள்ளது. அதை உடனே எடுத்துகொண்டால்?
இப்ப இவர்கள் ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசுக்கு நிலம் வேண்டும் என்றால் நீங்கள் போய் தான் ஆக வேண்டும். மக்களின் வாழ்விடத்தை விட்டுவிட்டு அவன் சொந்த நிலத்திலேயே தாய் நிலத்திலேயே அவனை அகதி ஆக்குவது இப்படி தான். நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி எடுக்கும்போது பெரிய கொடுமை நடந்திருக்கிறது. 500 ஏக்கர் சொந்த நிலம் நம்மகிட்ட இருப்பதை விட இந்த வளம் அரசிடம் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்யும். என்று 500 ஏக்கர் அரசாங்கத்திடம் கொடுத்து விடுகிறார். தனிமனிதன் பொதுச் சொத்து ஆக்குகிறான். இந்த அதிகாரம் பொதுச் சொத்தை தனியார் முதலாளிகளிடம் விற்க சொல்கிறது. அதை ஒட்டி இருந்த அனைத்து விளைநிலங்களையும் பறித்துவிட்டனார். மக்களை வெளியேற்றினார்கள், வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை கொடுக்கப்படும். கொடுத்தார்களா? இல்லை. அந்த நிலத்தை பறிகொடுத்த மக்கள் வீடு இல்லாமல், நாதி இல்லாமல், மின்வசதி இல்லாமல், குடிநீர் இல்லாமல் இன்றை வரைக்கும் நடுத்தெருவில் நிற்கார்கள். நான் அவர்களுக்காக போராடினேன். இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. நான் போராட்டத்துக்கு போகிற பொழுது 144 தடை உத்தரவு. நீங்கள் தான் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்திர்கள் அப்ப கொடுத்துவிட்டு இப்ப தடை. அதற்கு காரணம் ஒன்று சொன்னார்கள். சீமான் நெய்வேலியில் வந்து பேசினால் மின் உற்பத்தி பாதிக்கப்படும். நான் பேசுவதற்கு மின் உற்பத்தி பாதிக்கபடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எப்படிப்பட்ட ஆட்கள் எப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இவர்களை நம்பி நம் நிலத்தை, வளத்தை , நாட்டை ஒப்படைத்து இருக்கிறோம். அதே நிலைமை உங்களுக்கும் வரும். காலையில் இங்க சுத்தி பார்த்தால் அத்தனையும் பொன் விளைகின்ற பூமி. நீ எதற்கும் பயன்படதா நிலத்துல போய் வானுர்தி கட்டிக்கோ. எங்கள் விளைநிலங்களை வாழ்வதாரங்களை பறிகொடுக்க விரும்பவில்லை. நீ இழப்பீடு தரவும் வேணாம் உரியதொகையும் தர வேணாம். நான் விற்குறதா இல்லை. 4 வழி சாலை போட்டு இருக்கிறார்கள் அந்த சாலையை போட்டது தேசிய நெடுஞ்சாலை துறை, கப்பம் வசுலிப்பது தனியார் முதலாளி. அடிமை இந்தியாவில் கூட நாம் 50 கிலோ மீட்டர் 50 ரூபாய் கப்பம் கட்டி கிடைக்கவில்லை. விடுதலை பெற்ற இந்தியாவில் சுங்கம் கட்டுகிறார்கள். ரோட்டை விற்றுவிட்டார்கள் நாட்டை விற்க மாட்டான் என்று எப்படி நம்புகிறயா?
விலைவாசியை ஏன் கட்டுபடுத்த முடியால? பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்களே அதற்கான விலையை தீர்மானிக்கலாம் என்ற கொள்கை தப்பு. அவன் காலையில் ஒரு விலை மதியம் ஒரு விலை இரவு ஒரு விலை விற்கிறார்கள். இன்றைக்கு முதலமைச்சர் எட்டு வழி சாலை அமைப்பதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். எட்டு வழி சாலை அமைத்தால் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்படும். என்ன தொழில் வளர்ச்சி ஏற்படும் சொல்லு. அடிமை இந்தியாவில் என்ன முழக்கமாக வைத்தார்கள் be indian buy indian அது தேசப்பற்று. இந்தியானாக இரு. இந்தியாவின் பொருளை வாங்கு அது தேசப்பற்று. இன்றைக்கு யாரவது be indian buy indian சொன்னார்கள் என்றால் அவன் தேசதுரோகி. சொல்லி பாரு குரல்வளையை நெறித்துவடுவார்கள். நீ ஒரு சமூக விரோதி தேச துரோகி.
காந்தியடிகள் கண்ட சுயராஜ்ஜிய கொள்கை எங்கே, தற்சார்பு பொருளாதாரம் எங்க, அன்னை இந்திரகாந்தி வரையும் பேசியிருக்கிறார்கள் தற்சார்பு பொருளாதாரம் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கும், பாதுகாப்பிற்கும் நல்லது என்கிறார்கள். அந்த கொள்கை எங்கே? பெருந்தலைவர் காமராஜர் மெரினா கடற்கரையில் நடந்த மாநாட்டில் பேசும்பொழுது, ”நாட்டிலே சோற்றுக்கு கையேந்தி நிற்பதற்கா சுதந்திரம் பெற்றோம்”. நம்மகிட்ட என்ன இருக்கோ கூழோ, கஞ்சியோ குடிச்சிட்டு படுப்பதுதான் தற்சார்பு பொருளாதாரம். எங்க வீட்டில கூழ்தான் இருக்கு ஆனா எதிர்த்த வீட்ல என்ன இருக்கு என்பது எனக்கு தெரியாது. ஆனால் பக்கத்து வீட்டில பிரியாணி என்று பல்காட்டினேன் என்றால் அதற்கு பேர் வளர்ச்சி அல்ல பிச்சை.
இந்த நாடு எடுத்து கொண்டிருக்கிற கொள்கை, தத்துவம் பிச்சை. எல்லாத்தையும் ஏற்றுமதி செய்யுற வெங்காயம், பருப்புக்கு வெளிநாட்டில் கையேந்தி நிற்கிறார். இவ்வளவு பெரிய நாடு, இவ்வளவு பெரிய மக்கள் வெங்காயம் இறக்குமதி செய்யுது எங்க அரபு நாட்டில் பாலைவனம் நாட்டில வெங்காயம் இறக்குமதி செய்யுற கேவலம் எங்காவது உண்டா? அந்தக் கொடுமை இங்க நடக்கது.
வல்லரசு ஆகிவிட்டோம். அதுவும் பிரதமர் டெல்லியில் போய் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் வியக்கிறது. கடல்ல கொட்டுன எண்ணெயை அள்ளுனத பார்த்து வியக்கமா என்ன பண்ணும். நீங்க விட்டாலும் நாங்க விடமாட்டோம் ஒவ்வொரு நிலத்திலையும் கூடுசையை போட்டு படுத்துக்குவம்.
அய்யா எடப்பாடி நினைத்துக் கொண்டு இருக்கிறார். 6 மாசமோ 7 மாசமோ அடுத்து தமிழ்நாட்டில எந்த மூலையில் இருக்க போறார் என்று தெரியவில்லை. யாரு வந்தாலும் சரி விளைச்சலுக்கு பயன்படாது வீணாக கிடைக்கின்ற விளைநிலங்களை நீ எடுத்து பயன்படுத்தி கொள். பல நூறு ஆண்டுகளாக என் பாட்டன் முப்பாட்டன காட்டை திருத்தி, மேட்டை உழுது, நாடு கலைந்தோம். நல்ல கழனி திருத்தி, உழவு புரிந்து அங்க நாடுகள் தோன்ற செய்தோம். அங்க வீடுகள் கண்டோம். வேண்டிய பண்டங்கள் நீங்கிட செய்தோம். பாடுதல் பட்டோம் புவி பதபதைத்திடவே நாங்கள் நிலங்களில் உழைத்தோம் என்கிறார் புரட்சி பாவலர். ஆகவே நாம் வாழுவதற்காக நாட்டை வித்து காட்டை வெட்டி வித்து ஒன்றும் செய்ய முடியாது.
அம்மையார் ஜெயலலிதா 100,200 கார்ல போனங்க எப்படி செத்தாங்க என்று தெரியாமல் போய்விட்டது. இதுதான் நடக்கும். அப்ப இருக்குறங்களுக்கே அப்படினா இப்ப இருக்குறவங்களுக்கு எப்படி என்று நாம் யோசித்து பார்த்து கொள்ள வேண்டியது தான். இந்த ஒரு இடம் தான் இருக்கு இதையும் விட்டுவிட்டால் நீ அகதி, ஏழை உன்னை எவனும் மதிக்கமாட்டான். நரிக்குரவர்களை விட இழிவாகிவடுவோம். அவனுக்கு பாசி, ஊசிமணி விற்க தெரியும் ஆனால் நமக்கு அதுவும் தெரியாது. என்ன விலை கொடுத்து தலை கொடுத்தாலும் விலை நிலத்தை காப்பற்ற வேண்டும். தமிழனுக்கு இருந்தது இரண்டு நிலா. தமிழ்நிலா அதை அடித்து அகதி ஆக்கிவிட்டான். இங்க ஆக்கரமித்து அடித்து நம்மை அகதியாக்க போகிறார்கள். ஒரு ஏக்கர் ஒரு கோடி கொடுத்தாலும் அவனை விரட்டி அடிக்க வேண்டும். ஒரே இடத்தில் வாழ்ந்த நாம் பணம் வாங்கிவிட்டு சொந்தபந்தங்களை விட்டுவிட்டு வேற எங்க போய் வாழ்வது?
வைரமுத்து சொல்கிறார் ‘சொந்தங்களை பிரிவதில்லை சோகம், ஆடு, மாடுகளை பிரிவதில்லை சோகம், எது பெரிய சோகம் என்றால் தன் மண்ணை விட்டு பிரிவதுதான் உலகத்திலேயே பெரிய சோகம்’. என்கிறார். உன் பாட்டன், பூட்டன், பாட்டி, உங்க அம்மா அவர்களையெல்லாம் புதைத்தது இங்கே தான். இதை விட்டுவிட்டு எங்க போக சொல்லுகிறாய்? இது மண்ணா? உன் தாயின் மடி அதை எப்படி இன்னொருவர் ஆக்கரமிக்க அனுமதிப்பாய்? நீ பிறந்தது, வளர்ந்தது, கையை அசைத்தது, கால் அசைத்தது எல்லாமே இந்த நிலத்தில்தான் அப்பறம் எப்படி அனுமதிப்பாய்? இதை விட்டுவிட்டு எங்க போவது 500 ஏக்கர் என்பது எத்தனை கிராமம் அதைவிட்டு அப்படி என்ன நீ பறந்து போகப்போற. இது இல்லைனா என்ன நடக்க போகிறது. கட்ட வண்டியில் போவோம் அப்படிதான நம்ம முப்பாட்டன் வாழ்ந்தான். அப்படி வேகமாக போய் சென்னையில் என்ன பண்ண போற அப்படி சிறப்பாக சென்னயில் ஒன்றும் இல்லை.
-nakkheeran.in