கர்நாடகா வந்து அணைகளின் நீர்த்தேக்க அளவைக் கண்டுவிட்டு, ரஜினி தண்ணீரைத் திறந்து விடட்டும்: குமாரசாமி

“காவிரிப் நதி நீர் பிரச்னையில் அணைகளின் நீர்த் தேக்க நிலையை ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும், வேண்டும் என்றால் கர்நாடகா வந்து அவரே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடட்டும்” என்று கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி சார்பில் முதல்வராக ம.ஜ.த.வை சேர்ந்த குமாரசாமி பதவியேற்க உள்ளார். அவர், பெங்களூருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியுள்ளதாவது, “காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தில் காவிரி அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் தாராளமாக திறக்கப்படும். ஆனால், தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதால், இங்குள்ள நிலைமையை தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

தண்ணீர் திறந்தே ஆகவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் விரும்பினால், அவரே கர்நாடகாவுக்கு வந்து இங்குள்ள அணைகளின் நிலைமையை நேரில் தெரிந்து கொண்டு, அவரே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கட்டும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். ” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: