முத்து நகரமான தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தில் தமிழக அரசின் காவல்துறையினரால் தமிழ்தேசிய செயற்பாட்டாளர் தமிழரசனும் கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தமிழரசனின் பங்கும் இருக்கும். தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியெங்கும் தெருமுனைக்கூட்டங்கள் போட்டு தமிழ் மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியதில் தமிழரசனுக்கு பெரும்பங்குள்ளது.
தமிழீழத்தில் 2008, 2009 கால கட்டத்தில் சிறீலங்கா அரசால் மக்கள் படுகொலைசெய்யப்பட்ட பொழுது தூத்துக்குடி முழுவதிலும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கு ஆதரவாக மக்களிடத்தில் பரப்புரை செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழீழ பொங்கலும் தமிழரசன் அவர்களாலேயே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உழைக்கும் மக்களின் உரிமைக்காக தன் இறுதி வரை குரல்கொடுத்த தமிழரசன் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தின் போது தமிழக அரசின் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.
-athirvu.in