பெங்களூர்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக கோரி பெங்களூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கடந்த 3 மாதங்களாக மக்கள் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 100-ஆவது நாளையொட்டி ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர்.
அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்களை முன்னேறி கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர்.
அப்போது அந்த மக்கள் மீது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழகமே கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தற்காப்புக்கு நடந்ததாக முதல்வர் சாக்கு போக்கு கூறியுள்ளார். இதை கண்டித்து துப்பாக்கிச் சூட்டுக்கு முதல்வர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதையடுத்து தமிழக முதல்வர் பதவி விலகக் கோரி பெங்களூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கையும் இந்த போராட்டம் நடைபெற்றது.