தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் சுமார் 13 பேரை சுட்டுக்கொன்றது தமிழக அரசு. தமிழகத்தினை தாண்டியும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகிற சூழலில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்ட காரணத்தினால் தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவர் தான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-athirvu.in