தமிழா, சமஸ்கிருத பாடலா? காஞ்சி கோயில் சாமி ஊர்வலத்தில் வடகலை- தென்கலை தகராறு- அடிதடி

காஞ்சிபுரம்: சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக காஞ்சிபுரத்தில் பதற்றம் ஏற்பட்டது.

காஞ்சிபுரத்திலுள்ள புகழ் பெற்ற வரதராஜா பெருமாள் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தின்போது, பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கம். இன்றும் அதேபோல பாடல்கள் இசைக்கப்பட்டன.

அப்போது சமஸ்கிருத பாடல்களை பாடுவதா, தமிழ் பாடலை பாடுவதா என்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக முற்றியுள்ளது.

வட கலை மற்றும் தென் கலை பிரிவு பக்தர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: