ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது.. ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் பேட்டி

சென்னை: ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது என்று ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் இசக்கியப்பன் பேட்டி அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்றது. ஆனால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்தார். ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.

இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் இசக்கியப்பன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக திறக்கப்படாது. ஆலை திறக்கப்படும் என தலைமைச் செயல் அதிகாரி கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. செய்திகளில் ஆலை திறக்கப்படும் என தலைமைச் செயல் அதிகாரி கூறியதாக வெளியான செய்திகள் எல்லாம் பொய் என்றுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: