டெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வீடு நோக்கி டெல்லியில் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர துணை நிலை ஆளுநர் பைஜால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கோரிக்கை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் பைஜாலின் அலுவலகத்தில் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நிதி ஆயோக் கூட்டத்துக்கு டெல்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கேஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் கேஜ்ரிவாலின் கோரிக்கைக்கு தீர்வு காண வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் வீடு நோக்கி நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி நடத்தினர். இதில் இடதுசாரி கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். ஆனால் பிரதமர் மோடி வீட்டு பகுதியில் ஒன்று கூட போலீசார் தடை விதித்துள்ளனர்.

இப்போராட்டத்தால் 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: