பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியது தொடர்பாக பதியப்பட்டிருந்த வழக்கில் இன்று நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
ஊடகத்துறையில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்திட வேண்டுமென உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய பின்னரும் அவரை கைது செய்திடாமல் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வந்தது காவல்துறை. அதற்கான காரணம் எஸ்.வி சேகரின் உறவினர்கள் தமிழக அரசின் அதிகார மட்டத்தில் பணியிலிருப்பதுதான் என கூறப்பட்டுவந்தது.
இந்த நிலையில், இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் எஸ்.வி சேகருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த எஸ்.வி சேகர் யார் கண்ணிலும் படாமல் தப்பியோடினார்.
முன்னதாக, கைது செய்யப்பட வேண்டிய நபர் என உச்ச நீதிமன்றமே தெரிவித்த ஒருவரை காவல்துறையே பாதுகாப்பாக அழைத்துவந்து அவர் ஜாமீன் பெற்றதற்கு பின்னர் பாதுகாப்பாக அழைத்து சென்ற நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
-athirvu.in