ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள் என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!

திருவள்ளூர்: ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள்.

திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு அகழாய்வுப் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வுகளில் இதுவரை 351 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆட்சிக் காலத்தில் பெருமூர் என்கிற பெயரில் பட்டரைபெரும்புதூர் அழைக்கப்பட்டிருந்தது. இந்த அகழாய்வுப் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கு கிடைத்த பொருட்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை. ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் எனக் கூறப்படுகிறது. ஆனால் உலகின் முதல் மனிதன் இப்பகுதியில்தான் தோன்றினான் என புதிய வரலாற்றை தெரிவிக்கும் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.

3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் இங்கே கிடைத்திருக்கின்றன. கொடுமணல், ஆதிச்சநல்லூர், கீழடியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றார். இதே பட்டரைபெரும்புதூரில் 24 அடியில் 23 உறைகளுடனான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: