பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு செய்தது உண்டா? சீமான் கேள்வி

ஒரு மாநிலத்தில் இரு அதிகார மையம் இருப்பது ஏற்புடையது அல்ல. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு செய்தது உண்டா? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதுரை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஒரு மாநிலத்தில் இரு அதிகார மையம் இருப்பது ஏற்புடையது அல்ல. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு செய்தது உண்டா? காவல்துறை போன்ற நிர்வாகம் யாரிடம் உள்ளது? சட்டம் ஒழங்கை பராமரிப்பது யார்? மாநில உரிமையை பறித்து அத்துமீறல் செய்வது போல் உள்ளது. இந்த அரசு செயல்படாத கைப்பாவையாக செயல்படுகிறது.

முன்பு கலைஞர், ஜெயலலிதா இருந்த போது ஆளுநர் ஆய்வு நடத்தியது உண்டா? 8 வழிச்சாலைக்கு இடம் கொடுத்தவர்கள் விரும்பி கொடுத்தார்கள் என முதல்வர் நிர்பந்தத்தில் கூறுகிறார். மக்களுக்கு நிலத்திற்கு பதில் பணம் அளித்தால் உணவுக்கு என்ன செய்வார்கள்?

விளை நிலங்கள் பறிக்கப்பட்டு விட்டால் நாளைய தலைமுறை உணவுக்கு என்ன செய்யும் ? சாகர் மாலா திட்டத்தின் மூலம் நமது நாட்டை பாலைவனமாக மாற்றுகின்றனர். கார்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லாபம். பணத்திற்கு வட்டி கிடைக்கும் ரொட்டி கிடைக்குமா?

8 வழிச்சாலை எதிராக போராடியதற்காக என் மீதும் அமீர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். பாரதிராஜா எதுவும் பேசவில்லை கருத்து கூறினார். ஆகையால் அவர் மீது வழக்குப்பதிவு தேவையற்றது. நான் மதுரையில் கையெழுத்திட்டு, பின்னர் சேலம் ஒமலுார் செல்ல வேண்டும் என அவர் கூறினார்.

-nakkheeran.in

TAGS: