சென்னை: சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பதாகவும், இழப்பீடு மிகவும் அதிக அளவில் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் – சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் சட்டசபையில்அறிவித்துள்ளார். இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இந்த சாலையால் பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று சட்டசைபையில் இதுகுறித்து முதல்வர் பேசினார்.
அதில், தரமான சாலை அமைக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழகம் தொழில்வளர்ச்சி பெற்று வருகிறது. அதனால் இந்த சாலையின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த சாலைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சேலம்- சென்னை சாலை புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும்.8 வழி சாலை காரணமாக தமிழ்நாடு புதிய வளர்ச்சி பெறும். அதிநவீன தொழில்நுட்பத்தில் சாலையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு மிகவும் அதிக இழப்பீடு அளிக்கப்படும்.
மக்கள் இழப்பீடு குறித்து கவலைப்பட வேண்டாம். தருமபுரியில் இதுவரை 90 சதவிகிதம் நிலம் கையகபடுத்தபட்டுவிட்டது. மக்கள் இந்த சாலைக்கு அமோக ஆதரவு அளிக்கிறார்கள். மக்களுக்கு சாலையின் தேவை புரிகிறது. மக்கள் சம்மதம் தெரிவித்த பின்பே சாலை போடப்படுகிறது, என்றுள்ளார்.