அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் துவங்கியதும், இந்த சரிவு ஆரம்பித்தது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.0950 ரூபாயாக சரிந்தது. இது இதுவரை இல்லாத சரிவாகும். முன்னதாக, 2016, நவம்பர் 24ம் தேதி, அதாவது, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு சில தினங்கள் கழித்து, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது. ஆனால், இன்று அதைவிட மோசமாக ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.

இதன்பிறகு சற்று மேம்பட்ட ரூபாய் மதிப்பு காலை 11.12 மணி நிலவரப்படி 68.92 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

ஆசிய மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடப்பு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதும் மற்றொரு காரணமாகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயருவதால் இந்தியாவில், நடப்பு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த நிலையை மாற்றும் என எதிர்பார்ப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: