பிரபல சாமியாரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்! தமிழ் மக்களுக்கு ஆதரவு

தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாக்களிலும் பல படங்களிலும் நடித்தவர் சித்தார்த். அவர் நடித்த பாய்ஸ் படம் இன்றும் ரசிகர்களுக்கு எவர் கிரீன் தான். கடைசியாக அவர் நடித்த அவள் பேய்ப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் அவர் புதிய படத்தில் இணைந்துள்ளார். சமீபகாலமாகவே சித்தார்த் டவிட்டரில் நாட்டில் நடக்கும் சில கொடுமைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்.

அண்மையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது சித்தார்த் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சருக்கு கருணையில்லை. பிரதமருக்கு யோகாவை தவிர வேறு விசயத்தை பேசுவதற்கு நாக்கில்லை. ஸ்டெர்லைட் பற்றி பேச இது சரியான நேரமில்லை.

இப்போதும் இல்லை. எப்போதும் இல்லை. மக்கள் போலிசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலையை கண்டுபிடியுங்கள் என கூறியுள்ளார்.

-cineulagam.com