தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களான ரஜினி, கமல் என இருவருமே புதிய கட்சிகளின் மூலம் முழு நேர அரசியலில் இறங்கியுள்ளனர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும் இவர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களது மனநிலை என்னவாக இருக்கும்? வரவேற்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு உலக நாயகன் என்னுடைய தம்பிகள் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன். அதிலும் எனக்கும் உங்களுக்கும் பிடித்த விஜய் தம்பி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்பேன் என கூறியுள்ளார்.
-athirvu.in