சிறுமிகளின் குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்த கன்னியாஸ்திரிகள்

சமீப காலமாகவே கிருத்துவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தொடர்பான விவகாரங்கள் பெரும் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் வெளியாகின்றன.

அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தை நிர்வாகித்து வந்த கன்னியாஸ்திரிகள், சிறு வயதில் கர்ப்பமடைந்த சிறுமிகளின் குழந்தைகளை காசிற்காக விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக விசாரித்ததில், அந்த காப்பகத்தின் கன்னியாஸ்திரி கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரி ஆகிய இருவரும் சேர்ந்து 3 பச்சிளம் குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சேவை நோக்குடன் செயல்படுகிறோம் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கன்னியாஸ்திரிகளே இப்படி நடந்துகொண்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குக்கு ஆளாக்கியுள்ளது.

முன்னதாக, பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை 4 கேரள பாதிரியார்கள் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: