காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு.. கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு

பெங்களூர்: கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது,. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நொடிக்கு 38,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர், மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது.

இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

-tamil.oneindia.com

TAGS: