காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. 4 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது!

பெங்களூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு இருக்கிறது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.

இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.

அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தற்போது மேட்டூர் அணையில் வெளியேற்றும் நீரின் அளவு 100 கன அடியாக உள்ளது.

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது. மேட்டூர் அணை 100 அடியை எட்டும் போது அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

இன்று இரவு இல்லை நாளை காலை இந்த பூஜை செய்யபட்டும் என்று கூறப்பட்டுள்ளது. 4 வருடத்திற்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.2014, ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கடைசியாக நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.

64வது முறையாக நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியானதால் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

tamil.oneindia.com

TAGS: