சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தமிழகத்திற்கும் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு உள்ளது.
தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 67,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.
தாப்ரோது அங்கு மீண்டும் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்து இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் இருந்து 67,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது. இதனால் இன்று கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.