மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதனால் 20 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மொத்தமாக அம்மாநில இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியை சேர்ந்த மக்கள் இடஒதுக்கீட்டிற்காக பல வருடங்களாக போராடி வருகிறார்கள். தங்களுக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் இல்லை, தங்களை ஓபிசி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். மூன்று நாள் முன்பு நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்து இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையையே பாதிக்கப்பட்டு இருக்கிறது.
பிரச்சனை ஆனது
மராத்தா கிரந்தி மோட்சா சார்பாக போராட்டம் நடந்தது. முதலில் அமைதியாகத்தான் போராட்டம் நடந்தது. ஆனால் அதில் ஒரு மராத்தா இன விவசாயி, பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதனால், அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரண்மாகவே கடந்த மூன்று நாட்களாக அங்கு பெரிய கலவரம் நடந்து வந்தது.
செல்ல முடியாது
இந்த நிலையில் மொத்தமாக மும்பையை இந்த போராட்டம் முடக்கி போட்டு இருக்கிறது. அந்த நகரத்திற்கு மூன்று நாட்களாக யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையம் ஏற்பட்டு இருக்கிறத. முக்கியமாக மும்பை எக்ஸ்பிரஸ் சாலை மூடப்பட்டது. இதனால் அந்த மாநிலமே முடங்கியது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த போராட்டத்திற்கும், அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததிற்கும் பொறுப்பேற்று, முதல்வர் பட்நாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மராத்தா கிரந்தி மோட்சா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் முதல்வர் இந்த கோரிக்கையை பெரிய விஷயமாக கருதவில்லை. இதனால் இந்த போராட்டம் இன்னும் வீரியம் அடைந்தது.
ரயில் இயங்காது
தற்போது அங்கு பள்ளிகள் கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. அதேபோல் ரயில் போக்குவரத்தும் அங்கே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. மராத்தா கிரந்தி மோட்சா அமைப்பு மட்டுமில்லாமல் இன்னும் 13 இயக்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசு குழம்பிப் போய் போலீஸ் தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தது.
வாபஸ்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. போலீஸ் இந்த போராட்டத்தை போலீஸ், அரசு மிகவும் மோசமாக கையாண்டதாக மாரந்தா கிரந்தி மோட்சா அமைப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது.