கடந்த சில நாள்களாக உடல் நிலை மோசமடைந்து வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது, வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், நோய்த் தொற்று குறைந்து வருவதாகவும் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு கடந்து அவரது வீட்டில் தொண்டர்கள், உறவினர்கள், தலைவர்கள் குவியத் தொடங்கினர். கருணாநிதி ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காவேரி மருத்துவமனை முன்பும் தொண்டர்கள் குவிந்துவருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil