காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை.. வேதாரண்யம் விவசாயிகள் படுத்து போராட்டம்

நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், காவிரியாற்றில் கரைபுரண்டு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடினாலும், கடைமடை பகுதிகளில், தண்ணீர் வந்து சேரவில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாசனப்பகுதியான கொள்ளிடம் கடைமடயில் நடப்பாண்டு 15 ஆயிரம் ஹெக்டரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய தயாராக உள்ளனர். இந்நிலையில் டந்த 19ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் தற்போது வரை தண்ணீர் கடைமடை பகுதிக்கு வந்து சேரவில்லை என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஏற்கனவே அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் கவலையடைந்து உள்ள நிலையில், தற்போது தண்ணீர் திறந்துவிட்டு 11 நாட்களாகியும் தங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்பதால் இதனை கண்டித்து போராட்டம் நடத்தினர். வேதாரண்யம் அருகே விவசாயிகள் அனைவரும் அடைப்பாற்றில் படுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும் என கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.

tamil.oneindia.com

TAGS: