“மதத்தின் பெயரால் சாகடிக்கப்பட்ட கங்கை நதி”

கங்கை நதியின் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அரசு போதிய முக்கியத்துவம் அளிக்க தவறிவிட்டதா? மக்களிடம் பொறுப்புணர்வு அதிகரிக்க வேண்டுமா?’ என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

“தண்ணீர் என்ற பெயரை மாற்றி மாடு என்று வைத்தால் அது சுத்தமாக இருக்கும்,” என்று எள்ளலாக பதிவிட்டுள்ளார் கிஷோர் எனும் பிபிசி நேயர்.

கோமான் முகம்மது எனும் ஃபேஸ்புக் நேயர்,”வற்றாத ஜீவநதியை மதத்தின் பெயரால் பாழ்படுத்திவிட்டு, அதனை சுத்தம் செய்வோம் என்று பல ஆயிரம் கோடிகளை அரசியல் செய்து விழுங்கி விட்டார்கள் புதிய இந்தியாவை உருவாக்கி கொண்டிருப்பவர்கள். இப்போது கங்கை பாகிஸ்தானிலா ஓடுகிறது இந்தியாவில் தானே ஓடுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.

ganges river gangaவாரணாசியில் கங்கை நதியில் செத்து மிதக்கும் மாட்டை உண்ணும் நாய். (கோப்புப் படம்)

“அரசும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றாலும், தனி மனிதனாக ஒவ்வொருவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நம் வாரிசுகளுக்கு சுத்தமான நீர் நிலம், காற்று இவற்றை விட்டு செல்ல வேண்டியது நம் கடமை,” என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன் எனும் நேயர்.

“மக்களை பொறுப்பற்றவர்களாக மாற்றியதே அரசுதான். மதத்தின் பெயரால் சாகடிக்கபட்ட ஒரு நதி கங்கை. அரசுதான் பொறுப்பு,” என்கிறார் கவிதா செந்தில்குமார்.

பிணங்களை நீரில் விடுவதை நிறுத்த வேண்டும் என மனோகரன் வலியுறுத்தியுள்ளார். -BBC_Tamil

TAGS: